
2008 காலப்பகுதிகளில் போரானது உக்கிரத்தை எட்டியிருந்த நிலையில்; விடுதலைப்புலிகள் நிருவாக மற்றும் பன்னாட்டுச் செயற்பாடுகளில் பல முக்கியமான நகர்வுகளைச் செய்திருந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையானது புலம்பெயர் இளையோர்களின் கைகளுக்கு மாற்றப்படுகிறது என்று தமிழீழ தேசியத்தலைவரே சொல்லுமளவுக்கு நகர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதன்மையான அரசியல் பணிகள் புலம்பெயர் மக்களிடம் கைமாற்றப்பட்டுப் பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உண்மையில் புலம்பெயர் மக்கள் அல்லது புலம்பெயர் அமைப்புகள் அந்தப் பணியைச் சரிவரச் செய்திருக்கின்றனவா என்பதை மிக ஆழமாகப் பார்க்க வேண்டிய தேவை போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இருக்கிறது.
புலிகளால் ஒன்று சேர்க்கப்பட்டிருந்த மக்கள் இன்று அங்கையன், விஜயகலா, சந்திரகுமார், கஜேந்திரகுமார் என்று குழுப்பிரிந்து போகக் காரணம் புலம்பெயர் அமைப்புகள்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
பணியில் இருந்து தவறிய அமைப்புகள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் பணியைச் செய்யுமாறு புலிகளால் பணிக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியிலிருந்து விலகித் தத்தமது தனிப்பட்ட நலனுக்காகச் சிறிலங்காவில் கட்சி அரசியல்களை ஆதரிக்கும் மிகச் சிறுமையான வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். 2009 மே 18 வரைக்கும் தமிழீழ விடுதலையை நோக்கிப் போராட்டம் நடத்திய அமைப்புகள் த.தே.கூ ஆதரவு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதரவு என்ற நிலைப்பாடுகளில் முட்டிமோதிக் கொள்வது தமிழீழ மக்களை முட்டாளாக்குவது மட்டுமல்லாமல் சிறிலங்காவையும் திருப்திப்படுத்துகிறது.
த.தே.கூட்டமைப்பை ஆதரிப்பதாக ஒருசாரார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் செய்து அதன் மூலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசைக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூலம் பிரிக்கப்படும் த.தே.கூட்டமைப்பின் வாக்குகளால் தமக்கும் எப்படியாவது வாய்ப்புக் கிடைக்கும் எனக் காத்திருக்கும் அங்கயன், விஜயகலா, சந்திரகுமார் தரப்பை ஆதரிக்கும் ஒருசாரார் என்று புலம்பெயர் அமைப்புகள் தத்தமது தனிப்பட்ட நலன்கட்கு ஏற்றாற்போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் சில அரசியற் பிரிவுகளால் மற்றும் சமாதான செயலகத்தால் கையாளப்பட்டு வந்த சில இணையத்தளங்கள், செய்தித்தாள்களைத் தத்தமது செல்வாக்கிற்கு ஏற்றாற்போல் கையகப்படுத்திக் கொண்ட இந்த அமைப்புகள், இந்த ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட நலனிற்கேற்றாற் போல் விசமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த அமைப்புகளைக் கையாண்டவர்கள், இந்த இணையங்களைக் கையாண்டவர்கள் யாருமே இப்போது இல்லை என்றும் புலிகளின் எந்தவொரு கட்டமைப்பும் இப்போது இயங்கு நிலையில் இல்லையென்றும் நினைத்தவாறு கண்ணைமூடிக் கொண்டு பால்குடிக்கிறார்கள் இந்த விசமிகள்.
சுமந்திரனைத் தூக்கிவிட்டுக் கஜேந்திரகுமாரைக் கொண்டுவந்தால் சிறிலங்கா அரசும் ஐ.நாவும் அச்சப்பட்டுத் தமிழர்களுக்குத் தீர்வைத் தந்துவிடுவார்கள் என்பது போன்றதான அடிமுட்டாள்த்தனமான பரப்புரைகளை சில அமைப்புகளும் அதன் இணையங்களும் செய்துவருகின்றன.
மக்களை ஒரே அணிக்குள் வைத்துக் கொண்டு அடுத்தகட்ட வேலைகளை மிகத் துரிதமாகவும் அறிவார்ந்தும் செய்ய வேண்டும் என்ற கட்டளை புலிகளால் புலம்பெயர் அமைப்புகளுக்குக் கொடுக்கபட்ட நிலையில் அந்தப் பணியில் இருந்து தவறித் தாயகத்தில் மக்களைக் கட்சிகளாகப் பிரிக்கும் இழிவேலைகளைச் செய்து வருகின்றன இந்த அமைப்புகள்.
சில புலம்பெயர் அமைப்புகளின் கள்ள உறவுகள்
புலம்பெயர் அமைப்புகளின் பொறுப்பாளர்களில் பெரும்பாலானோர் சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட கட்சிகளை ஆதரிக்கும் நிலைக்கு வந்துள்ள நிலையில், தவிர்க்க முடியாத கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் அதிகாரிகளுடன் சிலர் இரகசியமாகவும் சிலர் வெளிப்படையாகவும் கூட உறவுகளை வைத்துள்ளனர். கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் எனப் பரப்புரை செய்யும் புலம்பெயர் அமைப்புகளைச் சேர்ந்த சிலரின் வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றிக் காகத்திடம் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. சான்றுகளுடன் அதை உறுதிப்படுத்த முடியும். ஆனால் எல்லாவற்றிற்கும் உரிய நேரம் இருக்கின்றது. த.தே.கூட்டமைப்பை ஆதரிக்கும் சில புலம்பெயர் அமைப்புகளின் பேராளர்கள் இரகசியமாக இந்தியாவிற்குச் சென்றுவரும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
இந்தியாவின் தேவைக்காகத் தாயகத்தில் மக்களைக் கட்சியாகப் பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கிற் செயற்படும் புலம்பெயர் அமைப்புகள், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களின் செயற்பாடுகள் இப்படியே தொடர்ந்து செல்ல இசைவளிப்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்காலத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலையை நோக்கி அடுத்த கட்ட வேலைத்திட்டத்தை நகர்த்தாமல் மக்களைக் குழுக்குழுவாகப் பிரிக்கும் இழிவேலையைச் செய்து கொண்டிருக்கும் தனிநபர்கள், அமைப்புகள், ஊடகங்கள் குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான காலம் கனிந்துவருகிறது.
தாயகத்தில் வாழும் அவயங்களை இழந்த போராளிகள், குடும்பங்களை இழந்து நிற்கும் போராளிகள், நீதி மன்றுகளில் விசாரணைகளைச் சந்திக்கப் பணமின்றிச் சிறைச்சாலைகளில் வாடும் போராளிகள், விடுவிக்கப்பட்டாலும் வெளியில் வரமுடியாமல் சிறைகளிலேயே வாடும் போராளிகளைக் கவனத்தில் எடுத்து அவர்களுக்கான அடிப்படை வாழ்வாதாரக் கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டிய புலம்பெயர் அமைப்புகள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலில் வெல்ல வேண்டும்; சிறிதரன் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று பணம் அனுப்புவது தமிழினத்திற்குச் செய்தும் இரண்டகமான செயலே.

அனுமதியின்றிப் புலிகளின் சின்னங் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றம்
புலிகளின் பெயரால் அறிக்கைகள் விடுவது, மதிப்புகள் வழங்குவது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளது. புலிகளின் பெயரால் வெளியிடப்படும் யாரென்று அறியாதோரின் அறிக்கைகள் குறித்துக் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. ஆனால், நன்கு அறியப்பட்ட யாரால் நடாத்தப்படுகிறது என்று அறியப்பட்ட ஊடகங்களில் புலிகளின் பெயரால் வெளியிடப்படும் அறிக்கைகள் வெளிடப்படுகின்றன.
தமிழீழத் தேசியத் தலைவரால் வழங்கி மதிப்பளிக்கப்படும் “மாமனிதர்” மதிப்பளிப்பானது இராணுவ நடவடிக்கையில் அல்லது அந்தப்பணியில் இருந்தபோது வீரச்சாவடைந்தவர்களுக்கு வழங்கப்படும் “இராணுவத் தரநிலைகள்” கட்சி அதரவு அல்லது தனிநபர் மீதான ஆதரவு அறி்கைகள் எனப் புலிகளின் சின்னங்கள் பொறித்த அறிக்கைகளைச் சில இணையங்கள் வெளியிட்டுவருகின்றன. மேலே குறிப்பிட்டது போல இந்த இணையங்களை நடத்தும் நபர்கள் இந்தியாவின் அதிகாரிகளுடன் நெருக்கமாக உள்ளார்கள். அவர்களின் நோக்கம் என்னவென்பதை இத்தனை படைக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பிய புலிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என நினைத்தால் அது அவர்களின் முட்டாள்த்தனமே.
புலம்பெயர் இளையவர்களே!

புலம்பெயர் இளையவர்களே! கட்சி ஆதரவு அல்லது தனிப்பட்ட அடிப்படையில் அரசியல்வாதிகளை ஆதரிக்கும் அமைப்புகள் அல்லது தனிநபர்களிடம் இருந்து விலகுங்கள். உங்களுக்குள் சிறு சிறு குழுக்களாக இணைந்து தமிழீழ விடுதலைப்போராட்டம் குறித்துப் பேசுங்கள்; விவாதியுங்கள். புலிகளின் தொழினுட்பங்களையும் இப்போது வளர்ந்திருக்கும் தொழினுட்பங்களையும் குறித்தும் நிறையப் படியுங்கள். வாய்க்கு வந்தபடி ஒருவரை ஒருவர் இரண்டகரெனப் பட்டங்கட்டும் புலம்பெயர் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் கட்சி அரசியல் ஆதரவாளர்கள் குறித்து அக்கறை செலுத்தாதீர்கள். தமிழீழ விடுதலைப்போரின் அடுத்த கட்ட வேலைத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் நபர்கள் அதற்கான விலையை விரைவில் செலுத்தியே ஆகவேண்டும்.
அடுத்தகட்ட அரசியலை எப்படி முன்னெடுக்கலாம் என்பது பற்றி மட்டும் சிந்தியுங்கள். தாயகத்தில் வாழும் போராளிகளுக்குப் பொருண்மிய ஆதரவு தரக்கூடிய தொழில்வாய்ப்புத் திட்டங்கள் குறித்து ஆராயுங்கள்.
மறவழிப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்து மீண்டும் மறவழி அரசியற் போராட்டத்தை அல்லது அமைதிவழி அரசியற் போராட்டத்தை நடத்தி வெற்றிகண்ட வரலாறுகளைத் தேடிப்படியுங்கள்; ஒன்றிணையுங்கள்.
ஆதவன்
26-03-2017
Be the first to comment