வலுவீனமான தேசிய இனத்தின் வலுவான‌ போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை (Economic Warfare) – தம்பியன் தமிழீழம்

உலகில் தேசிய இனங்களின் தன்னாட்சிக்கான போராட்டங்கள் சூழ்ச்சிகளாலும் கழுத்தறுப்புகளாலும் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தின் ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஈற்றில் அந்தத் தேசிய இனமானது தனது தலைவிதியைத் தானே தீர்மானிக்கும் ஆற்றலின்றியதாக்கப்பட்டு, மாற்றாரின் வருகைக்காகவும் ஒடுக்குமுறையாளர்களின் தயவுக்காகவும் கையேந்திக் காத்திருக்கும் பேரவலத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது.

அடக்குமுறை அரச, இராணுவ இயந்திரத்தின் கொழுத்துக் கிடக்கும் ஆயுத வலுவிற்கும், அந்த அடக்குமுறை அரச பயங்கரவாதத்தின் தூணாக நிற்கும் வல்லாண்மையாளர்களின் உலகப் பயங்கரவாதத்திற்கும் முன்னால், எண்ணிக்கையில் சிறுபான்மையாக நிற்கும் ஒரு தொன்மமான தேசிய இனம் தனது மறத்தாலும், ஈகத்தாலும், முட்டி மோதி நிற்கும் ஓர்மத்தாலும், உச்சகட்ட அர்ப்பணிப்புக்களாலும், ஈகங்களாலும் ஓரளவிற்கு மேல் என்னதான் செய்துவிட முடியும்?

எப்படித்தான் அடக்குமுறை அரச இயந்திரத்தை முற்றிலுமாக செயலிழக்க வைக்க முடியும்? எப்படித் தான் ஒடுக்குமுறை அரசின் இராணுவ இயந்திரத்தைக் கீறிப் பிளந்து தக‌ர்த்து எறியினும், அது உலக வல்லாண்மையாளர்களின் முழு ஆதரவுடன் மீண்டும் கொழுத்து, தனது நரபலி வெறியுடன் தனது இனவழிப்பு வெறிச்செயற்பாடுகளைத் தங்குதடையின்றி வெவ்வேறு வடிவங்களில் தொடரத் தான் செய்கின்றது.

ஒடுக்குமுறை அரசின் அரச பயங்கரவாதத்தின் முன்னர் ஒடுக்குண்டோரின் அறவழிப் போராட்டங்கள் நசுக்கப்பட்டுவிடுமல்லவா?

“எதிரி முன்னேறுகிறான், நாம் பின்வாங்குகிறோம்; எதிரி தங்குகிறான், நாம் துன்புறுத்துகிறோம்; எதிரி களைப்படைகிறான், நாம் தாக்குகிறோம்; எதிரி பின்வாங்குகிறான், நாம் துரத்துகிறோம்” என்று மாவோ கூறியது போன்ற கரந்தடிப் போர்முறையை (Guerrilla warfare), இந்த உலகமயமாதற் சூழலில், மக்களின் வாழ்க்கை முறையில், மக்கள் மயப்படுத்தி அதை ஒடுக்குண்ட தேசிய இனங்களின் போரியற் போராட்ட வடிவமாக்கல் என்பது கால நீட்சியில் வாய்ப்பானதொன்றல்லவே.

இருப்பினும், ஒடுக்குமுறை அரசின் இராணுவ இயந்திரத்தின் கொழுத்துக் கிடக்கும் ஆளணி மற்றும் ஆயுத வலுவிற்கும், அதற்கான பன்னாட்டு வல்லாண்மையாளர்களின் ஒத்துழைப்பிற்கும் முன்னால், பொருண்மிய முறையிலும், மாந்த‌ ஆற்றல் அளவிலும் தன்னிறைவு பெறும் வரையில், ஒடுக்குண்டிருக்கும் மக்களின் உரிமைக்கான போராட்ட வடிவமாகப் புரட்சியாளர்களின் முதற் தெரிவாகக் கரந்தடிப்போர்முறை (Guerrilla Warfare) தான் இருக்க முடியும் என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தவர்களால் உணரமுடியும்.

ஆனால், உலகமயமாதல் சூழலில் மாறி வரும் மக்களின் வாழ்வியலுக்கும் ஒடுக்குமுறை அரசின் ஊடகங்களின் மூலமான சித்து விளையாட்டுகளுக்கும் முன்னால், இந்தக் கரந்தடிப் போர்முறையின் கால நீட்சியானது, போராட்டத்தை மக்களிடமிருந்து அயன்மைப்படுத்தி விடும். எனில், மரபு வழி இராணுவமாகத் தனது போரியல் வடிவத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்று, சிறிலங்காப் படைகளுடன் படைவலுச் சமனிலையை உறுதிசெய்தும், உலக வல்லாண்மையாளர்களின் முழு ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்ட தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரில், தமிழீழ விடுதலையின் மரபுவழி இராணுவக் கட்டமைப்புத் தகர்க்கப்பட்டுவிட்டதன் பின்னரான, இந்தக் கையறு நிலைக் காலகட்டத்தில், ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டப் போர்முறை எப்படியமைய வேண்டுமென்பதை, தமது உண்மையான நிலையையும் உலகச் சூழலையும் கருத்திலெடுத்துத் திறனாய்ந்து தெரிந்தெடுத்து, முன்னகர்த்த வேண்டிய நிலையில் ஈழத்தமிழினம் இருக்கின்றது.

“பொருண்மியம் அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனைய எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” என்ற அடிப்படையில், விடயங்களை உள்வாங்கியே, ஒடுக்குமுறைக்கெதிரான போராட்ட வடிவமும் தெரிவு செய்யப்பட வேண்டும். உலகமயமாக்கல் கொள்கைகள் நீக்கமற எங்கும் நுழைந்துள்ளன‌. முதலீட்டு விரிவாக்கம் மற்றும் சந்தை விரிவாக்கம் என்ற கோணத்தில் உலக ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது. இதனால் முதலீட்டுக்குத் தேவையான பாதுகாப்பு, தொழிலுக்குத் தேவைப்படுகின்ற அமைதி, அவற்றை உறுதி செய்யும் அரசமைப்பு மற்றும் சட்ட திட்டங்கள் என்றவாறு அரச இயந்திரங்களும் பன்னாட்டு வல்லாண்மையாளர்களும் தமது நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள். எனவே, அவர்களை நிலைகுலையச் செய்து, அவர்களது அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்து, தமது விடுதலையை வென்றெடுக்க, வலுவீனமான நிலையிலிருக்கும் ஈழத் தமிழ்த்தேசத்தின் வலுவான போர்வடிவமாகவல்லது பொருண்மியப் போர் எனக் கணித்து, அது தொடர்பான வரலாற்று நிகழ்வுகளையும் அதனது இயலுமையையும் அதன் பின்னாலான அரசியலையும் அறிவிக்கும் ஒரு அறிகருவியாக இப்பத்தி வரையப்படுகின்றது.

எதிரியின் பொருண்மிய வலுவைக் குன்றச்செய்வதன் மூலம் அதன் இயங்காற்றலையும் போரிடும் வல்லமையையும் உறுதித் தன்மையையும் முடக்கும் நோக்கோடு பொருண்மிய இலக்குகளைத் தெரிவுசெய்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவதனையே பொருண்மியப் போர்முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். இந்தப் பொருண்மியப் போர்முறையானது அரசுகளுக்கிடையேயான ஆதிக்க விரிவாக்கப் போட்டியிலேயே வரலாற்றில் முதன்முதலில் அறிமுகமாகிப் பதியப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

  • நெப்போலியனின் பொருண்மியப் போர்

இராணுவ வழிகளில் இங்கிலாத்தைக் கைப்பற்ற‌ முடியாது போன நெப்போலியன், பொருண்மியப் போரினைத் தொடுப்பதன் மூலம் இங்கிலாந்தைத் தோற்கடிக்கலாம் என முடிவெடுத்தார். பிரான்சினையும் அது சார்ந்த கடற்கரைகளையும் கடற்படை முற்றுகைக்குள் கொண்டு வர 1806 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியா முயன்றது. இதற்குப் பதிலடியாக பிரித்தானியா மீது 1806-11-21 அன்று பொருண்மியத் தடையை விதித்தார் நெப்போலியன். பிரான்சில் தங்கியுள்ள அல்லது பிராசுடன் கூட்டணியிலுள்ள எல்லா ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியாவுடனான வணிகத்தை நிறுத்த வேண்டும் என நெப்போலியன் கட்டளையிட்டார். இது பிரித்தானியாவின் பொருண்மியத்தில் பேரிடியை ஏற்படுத்தியது.

  • பேர்ன் கார்ட் நடவடிக்கை

1940 ஆம் ஆண்டு கோடை காலத்திற்கும் வசந்த காலத்திற்குமிடையில் பிரித்தானியாவிற்கும் ஜேர்மனியிற்கும் நடந்த போரின் பின்னர், வெறுமனே இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரித்தானியாவை வெற்றிகொள்ள முடியாது என்கின்ற முடிவிற்கு ஜேர்மனி வந்தது. இதனால், பிரித்தானியா மீது பொருண்மியப் போர் தொடுக்க முடிவெடுத்துச் செயற்படுத்தியது ஜேர்மனி. பிரித்தானியாவின் பொருண்மியம் உலகளாவி இருந்தமையையே அதன் வலுவீனமாக்கும் திட்டத்துடன் ஜேர்மனி திட்டந்தீட்டியது. பிரித்தானிய வல்லாண்மையின் (ஏகாதிபத்தியத்தின்) காலனித்துவ நாடுகள் அனைத்தும் ஸ்ரேலிங் பவுன்ட்சினைத் தமது நாணயமாகப் பயன்படுத்தியன. பெருமளவிலான போலி நாணயத்தாள்களாக ஸ்ரேலிங் பவுன்ட்சினை அச்சிட்டுப் புழக்கத்திற்கு விடுவதன் மூலம் பெரிய பிரித்தானியாவின் நாணய அமைப்பினையே ஆட்டக்காணச் செய்து பிரித்தானியாவுக்கு பாரிய பொருண்மிய இழப்பினை ஏற்படுத்த முடிவெடுத்துச் செயற்படுத்தியது ஜேர்மனி. முதலில் போலி நாணயத்தாள்களை விண்ணூர்திகள் மூலம் எல்லா இடங்களிற்கும் பரவலடையச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தமையினால், இந்த வேலைத்திட்டம் SS Foreign Intelligence என்கின்ற வெளியகப் புலனாய்வு அமைப்பிடம் கையளிக்கப்பட்டது. இன்றைய பணப் பெறுமதியில் 3 பில்லியனுக்கும் அதிகமான ஸ்ரேலிங் பவுன்ட்ஸ் இவ்வாறு போலி நாணயத்தாள்களாக அச்சிடப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த பிரித்தானியா, பாரிய முயற்சிகளின் மூலம் இதனைக் கட்டுப்பாடிற்குக் கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்டது.

பனிப்போர் காலத்தின் பின்னர் எழுந்த தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்காக, அடக்குமுறை அரசுகள் விடுதலை கோரும் தேசிய இனங்களின் மீது பொருண்மியத் தடையை விதித்தும், அவர்களின் பொருண்மிய அடிப்படைகளைச் சிதைத்தும் பட்டினி போட்டுப் பணிய வைக்க முயற்சித்தமையானது அடக்குமுறை அரசின் விடுதலை கோரிப் போரிடும் தேசிய இனங்களின் மீதான பொருண்மியப் போர் தான். இதற்கெதிரான முறியடிப்புப் பொருண்மியப் போர்முறையாக, விடுதலைப் போரளிகளும் அரச எதிர்ப்பாளர்களும் அடக்குமுறை அரசின் மீது பொருண்மியப் போர் தொடுத்து, வலுவான அரச இராணுவ இயந்திரத்தை முடக்கி அதன் கொட்டத்தை அடக்கியமை தொடர்ச்சியான வரலாறாகப் பதிவாகின்றது.

எனினும் ஒடுக்குண்ட வலுவீனமான தேசிய இனங்கள் தம்மை ஒடுக்கும் அடக்குமுறை அரச பயங்கரவாதத்திற்கெதிராக, பொருண்மியப் போரை வலுவான போர்வடிவமாக முன்னெடுக்கும் போது அதனைப் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி அவதூறு பரப்புவது, பட்டியலிடுவது பின்னர் அழிப்பது என்பது இன்றைய உலக ஒழுங்கு என்பது போலாகிவிட்டது.

உண்மையான பொருளில், ஒரு தேசிய இன விடுதலை குறித்த பார்வையில், பயங்கரவாதம் என்பது பன்முகத்தன்மை கொண்ட அரசியல் நிகழ்வு.  வன்முறையை அல்லது வன்முறைக்கான அச்சுறுத்தலை அரசியல் ஆயுதமாக்கி, தமது அரசியல் உரிமைகளை வென்றெடுத்தலே பயங்கரவாதம். அதிகாரங்களில் இருப்பவர்களுக்கு சவாலாக அமைய வேறு எந்தத் தெரிவும் இல்லாதவிடத்து, வலுவீனமானவர்களால் பயன்படுத்தப்படும் வலுவான‌ அரசியல் ஆயுதமாகவே பயங்கரவாதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது (Jekins, 1986).

தேசிய இனங்களின் தன்னாட்சி கோரிய போராட்டங்கள் தவிர, அதிகாரத்தில் இருக்கும் அரசின் கொள்கைகளை மாற்றக் கோரியோ, அரசாங்கத்தில் உள்ள குறிப்பிட்ட தரப்பினை நீக்கக் கோரியோ அல்லது அரசாங்கக் கட்டமைப்பை மாற்றக் கோரியோ பயங்கரவாதம் கேட்பதுண்டு.

தாக்குதல்களிற்கான இலக்கினைத் (Targets) தெரிவு செய்தல் என்பது போராட்ட இயக்கங்களின் இயலுமையிலும் அரசியலறிவிலுமே தங்கியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலிற்கான இலக்குகள் எழுந்தமானவையாகவும் பொருத்தமற்றதாகவும் தெரிவு செய்யப்படுவதுமுண்டு. இந்த நாட்டின் எந்தவொரு பகுதியையும் எங்களால் பாதுகாப்பற்றதாக்க முடியும் என்ற குறியீட்டு முதன்மையை வழங்கும் முகமாகவும் இலக்குகள் தெரிவு செய்யப்படும்.

பயங்கரவாதம் என்பது அடிப்படையில் உளவியல் போர்முறை. இதன் மூலம் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஏனெனில், அதிகாரத்திலுள்ளவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்த இயலாத சூழலில் உள்ள போது, குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்துத் தாக்கி, அதன் மூலம் அரசியற் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க இயலுமானதாகின்றது.

எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடும் அரசிற்குப் பொருண்மியத் தாக்கத்தை உண்டு பண்ணும். ஏனெனில், அது தனது பாதுகாப்பிற்காக அதி கூடியளவு பொருண்மியத்தைச் செலவளிக்க நேரும். குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்துத் தாக்கினால், அந்த அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமல் விடவும் சகித்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு. ஆனால், பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை அப்படிச் சகித்துக்கொள்வதற்கு அரச இயந்திரங்களால் முடியாது.

எதிரியின் இடத்தில் பொருண்மியத் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியவாறும் இலக்குகள் தெரிவு செய்யப்படுவதுண்டு. ஆனால் நல்ல அரசியல் முதிர்ச்சியும் ஆய்வுத்திறனும் கொண்ட கட்டுக்கோப்பான விடுதலை இயக்கங்களால் (குறிப்பாக தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கங்கள்) கண்மூடித்தனமாகவும் பகுத்தறியாமலும் இலக்குகள் தெரிவு செய்யப்படுவதில்லை. அரசியல் நோக்கங்கள், கோரிக்கைகள், உளவியற் பண்புகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டே அவை இலக்குகளைத் தெரிவு செய்கின்றன. இவ்வாறாக, இலக்குகளும் அவற்றைத் தாக்கும் முறைகளும் ஆழ்ந்து ஆராய்ந்து தெரிவு செய்யப்படும்.

பன்னாட்டுப் பொருண்மிய ஒருங்கிணைப்பில், உலகமயமாதற் சூழலில், பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் உலகப் பொருண்மியத்திலும் தாக்கஞ் செலுத்தவல்லனவாகவுள்ளன. அத்துடன் அதிகரித்து வரும் உலகப் பொருண்மிய நடவடிக்கைகளில், இத்தகைய தாக்குதல்கள் அந்தப் பொருண்மிய நடவடிக்கைகளின் உறுதியைக் குறைக்க வல்லனவாக இருக்கின்றன.

பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக சுற்றுலாத்துறையின் மீதான தாக்குதல்கள், அரசிற்குப் பொருண்மிய நெருக்கடிகளைக் கொடுப்பதோடு அரசிற்கான வருமான வழிகளையும் குறைக்கும். வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களும் (Foreign Investment Projects) முதன்மையாக இலக்கு வைக்கப்படுகின்றன. ஏனெனில் இதன் மூலமான பொருண்மிய ஆற்றலில் அரசின் இயலுமை அதிகரிக்கின்றது. பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் தேசிய பொருண்மியத்தைப் (National Economy) பாதிக்குமெனில், அடக்குமுறை அரசு தனது இயங்கு ஆற்றலை இழக்கும்.

பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் பொதுவானதும் குறிப்பிடத்தக்கதுமான பொருண்மியத் தாக்கத்தை ஏற்படுத்தும். வணிக‌ நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு உதவித் திட்டங்களும் இலக்கு வைக்கப்படுகின்றன. தமக்கெதிரான அரசிற்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு அரசாங்கங்களின் (நிதியுதவி, இராணுவ உதவி, இராணுவ தளபாட வழங்கல்) குடிமக்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள். வெளிநாட்டு வருமானம் கிடைக்கவில்லையாயின், அரசின் வருமானம் குறைவதால் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக அதிகம் ஒதுக்கவும் முடியாது. விளைவாக மக்களுக்குப் பொருண்மிய நெருக்கடியும் ஏற்படும். ஏனெனில் பாதுகாப்புச் செலவீனங்கள் அதிகரித்தால், கல்வி, சமூக நலத் திட்டங்கள், உட்கட்டுமானங்கள் போன்றவற்றிற்காக அரசினால் போதியளவு செலவழிக்க முடியாத சூழல் உருவாகும். இதனால் அரச இயந்திரம் மீது மக்கள் அதிக வெறுப்பிற்குள்ளாவார்கள்.

பாதகமான பொருண்மிய விளைவுகள் எதிர்பாராத விதமாக, எண்ணிச் செய்யப்பட்ட ஒன்றாக இல்லாத சமயங்களும் உண்டு. ஆனாலும், தமது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலமாகப் பொருண்மியத் தாக்கங்களைக் கணித்துச் செய்யும் பொருண்மியப் போர்களும் உண்டு.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் எதிரான தாக்குதல்கள், அந்த ஒடுக்குமுறை அரசை பொருண்மிய நெருக்கடி மற்றும் சரிவுக்குள்ளாக்க இன்றியமையாதன‌ என கார்லோஸ் மறிகேல்லா என்ற பொதுவுடமைப் பொருண்மிய அறிஞர் கூறுகிறார். போக்குவரத்து இணைப்புகள், குழாய்வழி இணைப்பு  மற்றும் உணவு வழங்கல் என்பன மீதான தாக்குதல்கள் ஒடுக்குமுறை அரசை வலுவீனப்படுத்தும், விளைவாக, மக்கள் எல்லாச் சிக்கலிற்குமான வெறுப்பை ஆட்சியாளர் மீது காட்டுவார்கள் என கார்லோஸ் மறிகேல்லா மேலும் கூறினார்.

உலகளவில், ஒடுக்குமுறை அரசுகளிற்கெதிராகப் போராளி இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட பொருண்மியப் போர்களில் எப்படி இலக்குகள் தெரிவு செய்யப்பட்டன? எவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டன? என்பவற்றைத் துலாம்பரமாக எடுத்தியம்பும் பொருண்மியப் போர்முறையிலான தாக்குதல் நிகழ்வுகள் கீழ்வருமாறு;

  • லண்டனின் போக்குவரத்து அமைப்பு மீது 2005 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு போர் புரியும் அமெரிக்க வல்லாண்மை (ஏகாதிபத்திய) ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியைக் கூறியது. அதாவது “நீங்கள் பாதிப்படையக் கூடியவர்கள்”. இது ஒரு உளவியற் போர்முறை. இந்த உளவியற் போர்முறையின் விளைவான பொருண்மியத் தாக்கங்கள் மிக அதிகம்.
  • பொருண்மியம் நல்ல நிலையில் இருப்பதானது, மக்களின் மனக்குறையையும் குறைத்து விடும் எனக் கணித்த ரஸ்யாவின் சோசலிச புரட்சிகரக் கட்சி, முதலீடுகளைத் தவிர்க்கவும் உற்பத்திகளைக் குறைக்கவும் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தியது (Perrie, 1982).
  • பொருண்மிய இடையூறுகளை அதிகரிப்பதற்காகவும் எதிர்கால முதலீடுகளைத் தவிர்ப்பதற்காகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக நடுவங்களை IRA (Irish Republican Army) தாக்கியது. ஏனெனில், இந்த முதலீடுகளால் அதிகரித்த வேலைவாய்ப்புகளினால், மக்களின் மனக்குறைகள் குறைந்து, அமைதியாகப் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போகக் கூடியவர்களாகி விடுவார்கள் எனக் கணித்தே IRA அவ்வாறு செய்தது (Drake, 1988).
  • இந்தோனோசியாவின் பண்டா ஆச்சேயில் உள்ள தேசியவாதிகள் தமது மண்ணில் உள்ள வளங்களைச் சூறையாடும் பல்தேசிய நிறுவனங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினார்கள். ஏனெனில், இந்தோனோசியாவின் ஒடுக்குமுறை அரசாங்கம் பெருவாரியான பொருண்மிய நலனை இதன் மூலம் பெற்றது (Schulze, 2003).
  • 1960 களின் பிற்பகுதியில், பிரேசிலில் உள்ள நகர்ப்புற கொரில்லாப் போராளிகள் பெரு நிறுவனங்கள் மீதும் பல்தேசிய நிறுவனங்கள் மீதும் பெருவாரியாகத் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
  • பல்தேசிய நிறுவனங்களின் நிருவாகிகளைக் கடத்துதலும், அவர்களை விடுவிக்கப் பெருந்தொகைப் பணம் பெறுதலும் அந்தப் பணத்தில் இயக்கங்களை வளர்த்தலும், வெளிநாட்டு வணிகங்களுக்கெதிராகப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக ஆர்ஜன்டீனாவில் அதிகமாக நடைபெற்றது.
  • அல்ஜீரியாவில், இசுலாமியப் போராளிகளுக்கும் அல்ஜீரிய அரசாங்கத்திற்கும் இடையிலான போரில், வெளிநாட்டுப் பணியாளர்களும் தொழினுட்பவியலாளர்களும் இலக்கு வைக்கப்பட்டார்கள். இது போராளிகளின் உலகமயமாதலுக்கெதிரான வெறுப்பின் வெளிப்பாடுகளாகவும் அமைந்தது (Wills, 1997).

எண்ணெய்வளத் தொழிற்றுறை மீதான பொருண்மியத் தாக்குதல்கள்

  • எண்ணெய் எடுத்துச் செல்லப்படும் குழாய்வழியினை பொருண்மிய இலக்காகக்கொண்டு தகர்ப்பதானது, ஒடுக்குமுறை அரசின் வருமானம் ஈட்டும் வழியில் பாரிய அழிவினை ஏற்படுத்தும். இரண்டாம் உலகப் போரிற்கு முன்னர், அராபிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து, வடக்கு ஈராக்கின் எண்ணெய்க் குதங்களிலிருந்து காபியா துறைமுகத்திற்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய்வழியைப் பாதுகாப்பதற்காகச் சிறப்புப் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களை பிரித்தானிய ஆட்சியாளர்கள் நிறுத்தினார்கள்.
  • 1960 களில் அரச எதிர்ப்புப் போராளிகள் வெனிசுவேலாவிலும் கொலாம்பியாவில் இன்னமும் பெற்றோலியம் கொண்டு செல்லப்படும் குழாய்வழிப் பாதைகளைத் தமது தாக்குதல் இலக்காகக் கொண்டுள்ளனர்.
  • வட சூடானின் அரச படைகளுக்கும் தென் சூடான் போராளிகளுக்கும் இடையிலான போரில், தென் சூடானின் வடக்குப் பகுதியில் இருந்த எண்ணெய் வயல்களும், எண்ணெய்யை வட சூடானுக்கும் செங்கடலிலுள்ள துறைமுகங்களிற்கும் கொண்டு செல்லும் குழாய்வழிப் பாதையும் போராளிகளின் தாக்குதலுக்கான முதன்மையான பொருண்மிய இலக்குகளாக இருந்தன. அத்துடன் இந்த எண்ணெய் வயல்களில் பணிபுரிந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட, அரசின் வருமான வழி குறைந்து, அதன் பொருண்மிய ஆற்றலிழந்து போரிற்கான மேலதிக செலவைத் தாங்கிக்கொள்ள முடியாத சிக்கலிற்குள்ளானது அரசு.
  • மேற்கு ஆதரவு அரசாங்கத்தை பொருண்மிய அடிப்படையில் முடக்குவதற்காக, ஈராக்கிலுள்ள எண்ணெய் வயல்களும் அதனது குழாய் வழிப்பாதையும் கிளர்ச்சியாளர்களால் தொடர்ச்சியாகத் தாக்குதலிற்குள்ளான வண்ணமுள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டு வருகையைப் பெருமளவில் மட்டுப்படுத்தக் காரணமாகின்றது.
  • லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறுவது போன்ற வெளிநாட்டவர்களைக் கடத்தலும், அவர்களை விடுவிக்கப் பெருந்தொகைப் பணம் வாங்குவதும், போராளி இயக்கங்களிற்குத் தேவையான பொருண்மியத்தை ஈட்டித் தருவதுடன், வெளிநாட்டு முதலீடுகளையும் மட்டுப்படுத்துவதனால், இந்த நடவடிக்கைகளானவை ஒடுக்குமுறை அரசைப் பாரிய பொருண்மிய நெருக்கடிகளுக்குள் தள்ளுகின்றது. ஆர்ஜன்டீனாவில் வைத்து ஒரு பல்தேசிய நிறுவனத்தின் முதன்மை நிருவாகி ஒருவர் கொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, பியட் நிறுவனம் தனது முதலீடுகளை ஆர்ஜன்டீனாவிலிருந்து பிரேசிலிற்கு நகர்த்தியது (Beckett, 2001).
  • 11/09/2001 அன்று நிகழ்ந்த தாக்குதலின் விளைவாக, உலகளவில் வெளிநாட்டு முதலீடுகள் 2001- 2002 காலப்பகுதியில் பாதியாகக் குறைந்தது என்று வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஒன்றில் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக, பன்னாட்டு வணிகமாற்றும் நிறுவனங்கள், அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களைத் தமது விநியோகங்களிற்காக ஏற்க வேண்டியிருந்தது. இதனால் அமெரிக்காவில் இருந்த பன்னாட்டு வணிகமாற்றும் சிறிய நிறுவனங்கள் பாரிய‌ சிரமத்தை எதிர்கொண்டன (Chandler, 2002).
  • சைனிங் பாத் இயக்கம் என்கின்ற பேருவின் ஆயுதந்தாங்கிய இடதுசாரியப் புரட்சிகர இயக்கமானது, வெளிநாட்டு உதவி வழங்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் கனேடிய நாட்டு நிருவாகியை 1991 ஆம் ஆண்டு கொலை செய்ததன் மூலம், வெளிநாட்டு உதவித் திட்டங்களினால் மக்களின் விடுதலை உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்தன (Combs, 2005).

வணிக‌ நடவடிக்கைகள் மீதான பொருண்மியத் தாக்குதல்கள்

  • ஜெனரல் பினோசட் என்ற ஏகாதிபத்திய ஆதரவு மனநிலை கொண்ட சருவாதிகாரி சிலியின் அதிபராக ஆட்சியிலிருந்த போது, அமெரிக்காவிற்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் சிலியின் திராட்சையானது கலப்படத்திற்குள்ளாக்கிச் சிதைக்கப்பட்டதென்று கூறிப் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டது. இதனால், அமெரிக்கச் சந்தையில் சிலியாவின் திராட்சைக்கான கேள்வி வெகுவாகக் குறைந்தது. விளைவாக, சிலியின் வெளிநாட்டு வருமானம் மட்டுப்படுத்தப்பட்டு, சிலியின் பொருண்மியம் பெரும் பினடைவிற்குள்ளாகி, பினோசட்டின் அரசாங்கம் நலிவடைந்தது.
  • எல்சல்வடோரின் ஏற்றுமதிப் பயிர்களை பொருண்மிய இலக்குகளாகக் கொண்டு அதன் மீது கொரில்லாத் தாக்குதல்களை எல்சல்வடோர் கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதன் மூலம் ஒடுக்குமுறை அரசு பாரிய பொருண்மிய முடக்கத்திற்குள்ளானது.

சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வர்த்தகம் மீதான பொருண்மியத் தாக்குதல்கள்

சுற்றுலாத்துறையானது பெருமளவிலான வேலை வாய்ப்புகளை வழங்குவதாலும் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தருவதாலும், சுற்றுலாத்துறை மீதான தாக்குதலானது ஒடுக்குமுறை அரசினைப் பெருமளவிற்கு முடக்கும். ஆதலால், சுற்றுலாத்துறை மிக முதன்மையான பொருண்மிய இலக்காகக் கணிக்கப்படுகின்றது.

  • அடக்குமுறை அரசிற்கு உதவி வழங்கும் நாட்டின் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வலம் வரும் போது தாக்குதலிற்கு உள்ளாகின்றார்கள். அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி தாக்கப்படுகின்றார்கள். பிரான்சு அல்ஜீரியாவின் அடக்குமுறை அரசிற்கு முழு ஆதரவினை வழங்குவதால், அல்ஜீரிய போராளி இயக்கங்கள் பிரான்சு நாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துத் தாக்குகின்றார்க‌ள்.
  • சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து அதிக தாக்குதல்களை 1800 களிலேயே ஐரிசுப் போராளிகள் தொடுத்தனர். ஏனெனில், சுற்றுலாத்துறை அயர்லாந்தில் வீழ்ச்சியடைந்தால், பிரித்தானிய ஆட்சியாளருக்கு அயர்லாந்தை வல்வளைப்புச் செய்து வைக்க வேண்டிய உவப்பு அதிகம் இல்லாது போகும் என்பதாலாகும்.
  • துருக்கியின் பொருண்மியத்திற்குப் பேரடி கொடுக்கும் நோக்குடன், துருக்கியின் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து எண்ணிக்கையில் அதிகமான தாக்குதல்களை குர்தீசிய போராளிகள் மேற்கொண்டனர்.
  • கோர்சிகா தேசியவாதிகள் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்துத் தாக்கினார்கள், குறிப்பாகச் சுற்றுலாத்துறையில் உள்ள வெளிநாட்டு முதலீடுகளை இலக்கு வைத்துத் தாக்கினார்கள்.
  • ரூபமேறசு என்ற புரட்சிகர விடுதலை இயக்கமானது, 1970 களில் உருகுவேயின் ஒடுக்குமுறை அரசை வலுவீனப்படுத்துவதற்காக, உருகுவேக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிரட்டும் வகையில் தாக்குதல்களை மேற்கொண்டனர் (Butler, 1976).
  • அபுசயாவ் என்கின்ற கிளர்ச்சிக் குழுவானது, பிலிப்பைன்சின் தெற்குப் பகுதியில் முசுலிம்களுக்கென தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்காகப் போராடி வருகின்றது. இந்தக் கிளர்ச்சிக் குழுவானது சுற்றுலாத் துறை மீது தாக்குதல் தொடுத்து பிலிப்பைன்சு அரசைப் வலுவீனப்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகளைக் கடத்தி அவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுத் தமது நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான பொருண்மிய வலுவைப் பெற்றார்கள்.
  • ஜெம்மா இசுலாமியா என்கின்ற இசுலாமிய கிளர்ச்சி இயக்கமானது பாளியிலுள்ள சுற்றுலாத்தலங்கள் மீது தற்கொடைப் போராளிகளின் மூலம் பாரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. ஏனெனில் பாளியிலுள்ள சுற்றுலாப் பகுதிகளானவை மேற்கத்தேய ஆதிக்க ஊடுருவல்களைத் தெளிவாக எடுத்தியம்பி நிற்பதோடு, இரவுக் களியாட்டங்கள் மற்றும் மது, மாது என‍ப் பண்பாட்டுச் சீரழிவுகளும் இந்தப் பகுதியில் அதிகரித்துக் காணப்பட்டன‌. அத்துடன் மேற்கு ஆதரவு இந்தோனேசிய அரசானது இந்தத் தாக்குதல்களாற் பெரும் பொருண்மியப் பின்னடைவைச் சந்தித்தது (James, 2006).

தமிழீழ விடுதலைப் போரில் சிறிலங்கா மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பொருண்மிய இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட முதன்மையான தாக்குதல்கள் பின்வருமாறு;

சந்திரிக்கா பண்டாரநாயக்கா சிறிலங்காவின் அரச அதிபராக இருந்த காலப்பகுதியில் அவரது ஆட்சிக்காலத்தில் தான் முதன்மையான‌ பொருண்மிய‌ இலக்குகளான, மத்திய வங்கி, கொலன்னாவ எண்ணெய்க் குதம், கொழும்புத் துறைமுகம், கட்டுநாயக்க வானூர்தி நிலையம், ரெலிகொம், மத்திய பேருந்து நிலையம், மத்திய வங்கி, கலதாரி விடுதி போன்ற பொருண்மிய இலக்குகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன‌.

  • கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மத்திய வங்கி மீது 1996-01-31 அன்று முற்பகல் 4 மணி அளவில் விடுதலைப் புலிகள் பாரிய குண்டுத் தாக்குதலை நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திற்கு பாரிய அழிவு ஏற்பட்டதுடன் 86 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் சுமார் 1400 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுத்தாக்குதலில் 6 ஜப்பான் குடிமக்கள், அமெரிக்க குடிமகன் மற்றும் ஒல்லாந்து குடிமகன் என 8 வெளிநாட்டவர்களும் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலும் விடுதலை இயக்கங்களின் பொருண்மியப் போர் குறித்த பாடத்திட்டத்தில் ஒரு ஒரு முதன்மையான தாக்குதலாக‌ வரலாற்றிற் பதிவாகிவிட்டது.
  • 1996-04-12 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்புத் துறைமுகத்துக்குள் ஊடுருவி 3 சரக்குக் கப்பல்கள் மற்றும் 3 கடற்படைப் படகுகள் என்பனவற்றைத் தகர்த்ததோடு துறைமுகக் கட்டடத் தொகுதியையும் தாக்கினர்.
  • இவற்றுள் 2001-07-24 அன்று தொடுக்கப்பட்ட கட்டுநாயக்கா வானூர்தி நிலையம் மீதான தாக்குதலானது பொருண்மியப் போர்முறையின் உச்சக்கட்ட வெற்றியாக அனைத்து விடுதலை இயக்கங்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதில், கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தைத் தகர்த்த விடுதலைப் புலிகள் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேற்பட்ட பொருண்மிய அழிவை ஒடுக்கும் சிங்களத்திற்கு ஏற்படுத்திச் சிங்களக் கொட்டத்தை முடக்கிப் போட்டனர்.

1996 ஏப்ரலில் கொழும்புத்துறைமுகம் தாக்கப்பட்ட போதும், 2001 யூலையில் கட்டுநாயக்க வானூர்திப் படைத்தளம் தாக்கப்பட்ட போதும் கொழும்புத்துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கான காப்புறுதிக் கட்டணங்கள் பெருமளவு அதிகரிக்கப்பட்டன. பல கப்பல்கள் கொழும்பைத் தவிர்த்து இந்தியாவின் தூத்துக்குடிக்கும் டுபாய்க்கும் செல்லத் தொடங்கின. இறக்கி ஏற்றுமதி மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான வருமானத்தை ஈட்டும் சிறிலங்கா இக்காலத்தில் பெரும் பொருண்மியச் சரிவை எதிர்கொண்டது.

  • 2006-10-18 அன்று காலித்துறைமுகம் மீது விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை மேற்கொண்டனர்.
  • 2007 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கொழும்புத் துறைமுகம் மீது மீண்டுமொருமுறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, கொழும்பில் முதலீடு செய்வதைவிட பக்தாத்திலே முதலீடு செய்யலாம் என்றளவிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சிந்திக்கவைத்தது.

விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் வருகையானது சிறிலங்காவின் பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்தியது. ஆனால், தாக்குதல்களின் துல்லியத் தன்மையில் தவிர்க்க முடியாமல் விட்ட தவறுகளானவை பாரிய இழப்புகளை ஏற்படுத்தத் தவறிவிட்டன.

  • வான் புலிகளின் வெளிப்படையாக உரிமைகோரப்பட்ட‌ முதலாவது வான்குண்டுத் தாக்குதலானது 2007-03-26 அன்று கட்டுநாயக்க படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்டது.
  • 2007-04-24 அன்று பலாலி வான்படைத் தளம் மீது புலிகளின் வானூர்திகள் தாக்குதல் நடத்தின.
  • தென்னிலங்கையில் கொலன்னாவ, கெரவலப்பிட்டி ஆகிய இடங்களில் இருந்த எண்ணெய்க் குதங்கள் மீது புலிகளின் வானூர்திகளிலிருந்து 2007-04-29 அன்று குண்டுகள் வீசப்பட்டன.

எனவே, எமது தமிழீழ விடுதலைப் போரில் வென்றாவதற்காக நாம் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் மீது மேற்கொண்ட பொருண்மியப் போர்களால் கிலி கொண்ட சிறிலங்கா அரச பயங்கரவாதிகளும் வல்லாண்மைக் (ஏகாதிபத்திய) கொடுங்கோலர்களும், எமது பொருண்மியப் போர் நடவடிக்கைகளைப் பயங்கரவாத நடவடிக்கைகள் என்று முத்திரை குத்தி, எமது தமீழீழ மக்களை உலகளவில் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கும் நோக்குடன் நரித்தனமான பரப்புரையை உலகளவில் செய்தார்கள். 

எமது விடுதலை இயக்கமும் இந்தச் சூழ்ச்சியான பரப்புரை அழுத்தத்திற்குள் சிக்கி, எமக்கு வலுவான போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறையை எமது விடுதலைப் போராட்டம் பன்னாட்டுமயப்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் பெருமளவிற்குக் குறைத்துக் கொண்டது. இதுவே தமிழர்களின் மீதான இனவழிப்புப் போரை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கும் அதன் இணைப்பாளர்களான இந்திய, மேற்குலகக் கூட்டுச் சூழ்ச்சிக்கும் நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.

தமிழீழத் தமிழ்த் தேசிய இனம் எப்போதும் இல்லாத அளவில் இப்போது வலுவீனமாக‌ இருப்பதால், மாற்றாரின் வருகைக்காகவும் ஒடுக்குமுறையாளர்களின் தயவுக்காகவும் கையேந்திக் காத்திருந்து களைத்துவிட்டது. இந்த இழிநிலை தொடர்ந்தால் நாம் நக்கிப் பிழைக்கும் கேவலமான சமூகமாக இந்த உலகப் பந்தில் வாழத் தலைப்பட்டு, எமக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த‌ ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும், தம்மை ஒறுத்து விடுதலைக்காகப் போராடி இன்று பரிதவிக்கும் நிலையில் ஏக்கங்களோடு நடைபிணமாக அலையும் போராளிகளுக்கும், நாம் காவு கொடுத்துவிட்ட ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும் இன்று நட்டாற்றில் தனித்துத் தவிக்கவிடப்பட்டிருக்கும் போரே வாழ்வென வாழ்ந்த மக்களுக்கும் இரண்டகம் செய்பவர்களாவோம்.

இந்த இழிநிலையிலிருந்து விடுபட, வலுவீனமான தேசிய இனத்தின் வலுவான‌ போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை குறித்துத் தெளிந்து அதனை முனைப்புறுத்தி சிறிலங்கா அரச இயந்திரத்தைத் தகர்த்து, எமது விடுதலையை வென்றெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

-தம்பியன் தமிழீழம்-

2017-02-14

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*